Air Plane Mode என்றால் என்ன?


Airplane Mode icon is seen displayed on a phone screen
GETTY IMAGES

Airplane Mode என்றால் ,

இது உங்கள் ஸ்மார்ட்போன்,லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களில் உள்ள ஒரு அமைப்பாகும். இதனை on செய்வதன் மூலம் அழைப்புகளை (call) மேற்கொள்ளவோ ​​அல்லது எடுக்கவோ முடியாது. அது மட்டுமின்றி ரேடியோ சிக்னல்கள், வைஃபை, புளூடூத் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. WhatsApp செய்திகளை அனுப்பவோ அல்லது இணையத்தில் உலாவவோ முடியாது.

இதனை எங்கு பயன்படுத்தலாம்/ எங்கு பயன்படுகிறது.

A commercial airplane landing at an airport on a bright summer day

பொதுவாக விமானத்தில் உங்கள் ஸ்மார்ட்போன்,லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களை ஆப் (off) செய்வதற்கு பதிலாக இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். 

விமானப் பயன்முறையானது வானொலி அலைகள் மற்றும் மின்காந்த குறுக்கீடுகளை (EMI) வெளியிடும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற வயர்லெஸ் சாதனங்களுடன் தொடர்புடையது, இது விமானத் தகவல்தொடர்புகளில் குறுக்கிடலாம். என்பதால் தான் உங்கள் ஸ்மார்ட்போன், மடிக்கணினி, டேப்லெட் அல்லது பிற சாதனங்களை off செய்ய அல்லது Air plane mode பயன்முறையை இயக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.


Air Plane Mode/ flight mode எவ்வாறு பயன்படுத்துவது?

ஸ்மார்ட்போனில், ஏயார் ப்லேன் மோடை ஓன் (on) அல்லது ஆப் (off) செய்வது மிகவும் எளிது.

Airplane Mode Enabled

ஐபோனில், ஏயார் பிளேன் மொட் (air plane mode) கான ஐகான் Control Center ல் உள்ளது.

 உங்கள் மொபைலின் வயது மற்றும் மாதிரியைப் பொறுத்து, திரையின் மேலிருந்து கீழே ஸ்வைப் செய்து விமானப் பயன்முறையை அணுக வேண்டும். 

Screen > Control Center > swipe down > Airplane mode

ஆண்ட்ராய்டில், அணுக திரையின் மேலிருந்து கீழே ஸ்வைப் செய்வதன் மூலம் air plane mode ஐ on செய்ய முடியும். நீங்கள் அதைச் (on) செயல்படுத்தினால், ​​உங்கள் ஃபோன் எயார் ப்ளேன் மோட் ல் இருக்கும்.

Screen > Swipe down > Airplane mode


நீங்கள் Mac பயனராக இருந்தால், air plan mode டைப் பயன்படுத்த, Wi-Fi மற்றும் Bluetooth இணைப்புகள் இரண்டையும் (turn off) செய்ய வேண்டும்.

 விண்டோஸ் லேப்டாப், கம்பியூட்டர்களில் பணிப்பட்டியில் உள்ள நெட்வொர்க் ஐகானைத் தேர்ந்தெடுத்து, விமானப் பயன்முறையைத் (Airplane mode) தேர்ந்தெடுக்கவும்.
 Screen > Network icon > Airplane mode.





Post a Comment

Previous Post Next Post