ChatGPT என்றால் என்ன?

 ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு கொண்ட பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் கருவியாகும். 

இது 30ம் திகதி நவம்பர் மாதம் 2022 ல் அதிகார பூர்வமாக Open AI எனும் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட AI ஆகும். 

இதனை உருவாக்கியவர்கள் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் Elon Musk மற்றும் Sam Altman 

இது ஒரு Chat Bot போன்ற வடிவத்தில் இருந்தாலும் நாம் இதில் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் போன்றே பதில் தெரிவிப்பதும் நாம் பல தேடல்களை தேடுவதற்கு பதிலாக ஒரே தேடலில் சுருக்கமாக அனைத்து தகவல்களையும் தருவதே இதன் சிறப்பம்சமாகும்.Google செயலி போல் விளம்பரங்களுடன் தேடலுக்கேற்ற அனைத்தையும் தராமல் நமக்கு தேவையான விடயங்களை ஒரே பதிலில் அளிப்பதால் இது நமது வேலையை எளிதாக்குகிறது.



இதற்காக Microsoft நிறுவனம் 2019ல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. மேலும் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை மட்டும் தந்து நிறுத்தி விடாமல் தனியாக கதை ஒன்றை எழுதவும்,கதையை விளக்கமளிக்கவும், கட்டுரை எழுதுதல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறது.

மாணவர்களுக்கு இதனால் பல பயன்கள் உள்ளன. அவர்கள் இதை வைத்து வீட்டுப் பாடங்களை இலகுவாக முடிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஆசிரியர் அல்லது பெற்றோர்களின் உதவி தேவையில்லை. இதன் காரணமாகவே இந்தியா உட்பட பல நாடுகளிலுள்ள கல்லூரிகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது 2021 வரைக்கும் இருக்கும் தரவுகளை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

இவை அனைத்தும் 100 வீதம் சரியாக இருக்கும் என்று யாரும் கூறியது இல்லை. ஆனால் இது அனேகமான வேலைகளை இலகுவாக சரியாக செய்கிறது.

ChatGPTயை பயன்படுத்த எங்கு செல்ல வேண்டும்? 

https://chat.openai.com இணையத்திற்கு சென்று Account  இனை create செய்யுங்கள். அவ்வளவு தான் கீழே Chat Box போன்று வரும் நீங்கள் கேள்விகளை கேட்கலாம் விடை வந்துக் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த கேள்விகளை ஆங்கிலத்தில் தான் கேட்க முடியும். 

 

Post a Comment

Previous Post Next Post