Twitter Blue இந்தியாவில் அறிமுகம்

 
 எலான் மஸ்கின் டுவிட்டர் நிறுவனம் அதன் ப்ரீமியம் அம்சங்களை கொண்ட கருவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ட்விட்டரில் blue tick பெறவும், 4,000 எழுத்துக்கள் கொண்ட ட்வீட்கள் இடவும், ஏற்கனவே பதிவிட்ட ட்வீட்களை எடிட் செய்யவும், ட்விட்டரின் வசதிகளை முன்கூட்டியே பயன்படுத்தவும் முடியும்.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் அதன் புதிய Twitter Blue வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி அமெரிக்கா, சவூதி அரேபியா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், UK, இந்தியா, பிரேஸில்,  இந்தோனேஷியா போன்ற 15 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் Twitter Blue இனை பயன்படுத்தி  மிக நீளமான வீடியோக்களை ட்விட்டரில் பதிவிடவும் முடியும். Profile போட்டோவாக NFT (Non-Fungible Token) பயன்படுத்துவதற்கான விருப்பம் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ட்விட்டர் மாத சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சந்தா கட்டணத்தை Android, IOS, Web ஆகியவற்றில் எவ்வளவு செலுத்தி பெற முடியும். என்பதை பார்க்கலாம்.

இதை இணையத்தில் பயன்படுத்தினால் மாதம் ரூ.650 கட்டணமும் மொபைல் மூலம் மாதம் ரூ.900 கட்டணமும், மேலும் ஆண்டுக்கு ரூ.6800 தள்ளுபடி செய்யப்பட்ட திட்டத்தையும் வழங்குகிறது. மாதத்திற்கு ரூ.566.67 

உங்கள் சுய விபரம், கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த ப்ளூ டிக் வழங்கப்படும். ஆனால் மற்றைய வசதிகளை கட்டணம் செலுத்தியவுடன் பயன்படுத்த முடியும். 

குறைந்தது 90 நாட்கள் பழைமையான கணக்குகள் மட்டுமே Twitter Blue இனை பயன்படுத்த முடியும். மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டிருக்க வேண்டும் என Twitter Blue தெரிவித்துள்ளது.

நீங்கள் ட்விட்டர் ப்ளூவை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் உங்கள் ப்ரொபைல் படம், பெயர் அல்லது எதாவது விபரங்களை மாற்றினால் உங்களின் ப்ளூ டிக் நீக்கப்படும். பின்னர் ட்விட்டர் உங்கள் விவரங்களை சரிபார்த்து மீண்டும் ப்ளூ டிக் இனை வழங்கும்.

Twitter Blue யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Image Credits: Twitter @TwitterBlue

இது வணிக நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வியாபார விடயங்களுக்காக ட்விட்டரை பயன்படுத்தும் நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  ட்விட்டரில் பிரபலங்களை அல்லது உண்மையான கணக்குகளை குறிக்க நீல நிற சரி பார்ப்பு குறி அதாவது blue tick பயன்படுத்தப்பட்டது. இது ட்விட்டர் ப்ளூ சந்தா செலுத்தும் முறை மூலம் அதிக பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.   இப்போது அனைவரும் கட்டணம் செலுத்தி இந்த வசதிகளைப் பெற முடியும்.



Post a Comment

Previous Post Next Post