ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் - கார் உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் சியோமி

 செல்போன் உற்பத்தி நிறுவனமான சியோமி பீஜிங் எனும் நகரில் புதிதாக கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சியோமி உருவாக்கி வரும் புதிய கார் உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலையில் சியோமி எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

புதிய எலெக்ட்ரிக் கார் பிரிவில் ஆயிரம் கோடி டாலர்களை சியோமி நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

இரண்டு கட்டங்களாக உருவாக்கப்படுகின்ற இந்த உற்பத்தி ஆலையில் இதுதவிர தலைமையகம், விற்பனை, ஆய்வு பணிகளுக்கான அலுவலகங்களை சியோமி கட்டமைக்க இருக்கிறது. 2024ல் இந்த ஆலை முழு பயன்பாட்டில் வரும் என கூறப்படுகிறது.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சியோமி நிறுவனம் புதிய வியாபரத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post