ட்விட்டரின் ‘டிப்ஸ்’ அம்சத்தை இனி ஆண்ட்ராய்ட் பயனர்களும் பயன்படுத்தலாம்!

 

உலக அளவில் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். பெரும்பாலான மக்கள் ட்விட்டர் மூலமாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ட்விட்டரின் ‘டிப்ஸ்’ அம்சம் தற்போது ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


ட்விட்டரில் தரமான கன்டென்டுகளை பயனர்கள் பதிவிடுவதும் பகிர்வதும் வழக்கம். இதற்காக கடுமையான உழைப்பை அவர்கள் செலுத்தி இருப்பார்கள். photo,text, video என எதுவாகவும் இருக்கலாம். வழக்கமாக அதை பார்க்கின்ற பயனர்கள் அதற்கு லைக் கொடுப்பது, கமெண்ட் செய்வது, ரீ-ட்வீட் செய்வது என வெறுமனே பாராட்டுவதோடு கடந்து விடுவார்கள். ஆனால் இந்த டிப்ஸ் அம்சத்தின் மூலம் தரமான கன்டென்டை கொடுத்தவருக்கு சன்மானத்தை கொடுக்கலாம். அதாவது ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த டிப்ஸ் அம்சம் அனுமதிக்கிறது. பணமாக மட்டுமல்லாது கிரிப்டோகரன்சியாகவும் ஒரு பயனர் மற்றொரு பயனருக்கு அனுப்ப வழிவகை செய்கிறது ‘டிப்ஸ்’. இதற்கென பேமெண்ட் தளங்களை லிங்க் செய்துள்ளது ட்விட்டர்.




இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?


இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்கள் 

• ட்விட்டர் பக்கத்தில் உள்ள ‘Edit Profile’ லிங்கை க்ளிக் செய்யவும்.

• பின்னர் கீழ் புறமாக ஸ்க்ரால் செய்ய வேண்டும். 

• அதில் ‘டிப்ஸ்’ டேக் இருக்கும். அதை க்ளிக் செய்து ‘Allow’ செய்தால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

 இதில் பண பரிமாற்றம் மேற்கொள்பவரும் பணம் அனுப்புபவர், பெறுபவர் இருவரும் இந்த அம்சத்தை பயன்படுத்த வேண்டும். 

இப்போதைக்கு இந்த டிப்ஸ் வசதியை பத்திரிகையாளர்கள், கிரியேட்டர்கள் என குறுகிய ட்விட்டர் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ட்விட்டர்  தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post